முன்னாள் மத்திய மந்திரி காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்.;

Update:2025-11-28 21:35 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் உள்துறை இணை மந்திரியாகவும், நிலக்கரித்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, 81 வயதான ஸ்ரீபிரகாஷ் உடல்நலக்குறைவு காரணமாக கான்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஸ்ரீபிரகாஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, ஸ்ரீபிரகாஷ் மறைவுக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்