போலீசார் மீது தாக்குதல்; 5 பேர் காயம், வாகனங்களுக்கு தீ வைப்பு
பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.;
பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னாவின் இந்திரபுரியில் கடந்த 15ம் தேதி இரு குழந்தைகள் காரில் சடலமாக மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று இரவு இந்திராபுரியில் சாலை மரியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர். மேலும், போலீஸ் வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.