சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் பிஹனிர் பகுதியில் இருந்து ஜெய்சல்மீர் பகுதிக்கு இன்று சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது. பிஹனிர் அருகே உள்ள கொல்யட் பகுதியில் சென்றபோது சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சரக்கு ரெயிலின் 37 பெட்டிகளும் தடம் புரண்டன.
விபத்து குறித்து தகவலறிந்த ரெயில்வே துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, சரக்கு ரெயில் விபத்தால் அந்த தண்டவாளத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ஜெய்சல்மீர் - லால்ஹர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.