பஞ்சாப் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு சம்பவம்

ஐகோர்ட்டு பதிவாளருக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-20 17:27 IST

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பஞ்சாப் ஐகோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் ஐகோர்ட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஐகோர்ட்டு பதிவாளருக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்ர்.

Tags:    

மேலும் செய்திகள்