அருணாசல பிரதேசம்: நிலச்சரிவால் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி
அசாம், சிக்கிம் மாநிலங்களில் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.;
கோப்புப்படம்
இட்டா நகர்,
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் அசாம், சிக்கிம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் பனா-செப் பகுதியில் பலத்த மழையின் பெய்தது.
அப்போது பள்ளத்தாக்கில் விழுந்த காரில் இரண்டு குடும்பங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 32 வயதான சஞ்சு, அவரது மனைவி தாசும், அவர்களது இரண்டு குழந்தைகள், கச்சுங் (5) மற்றும் நிச்சா (2), ஒரு கர்ப்பிணித் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு சுமோ வாகனமும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சற்று தள்ளி இருந்ததால் நல்வாய்ப்பாக அந்த அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.",