டெல்லியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று பின்னிரவு அங்கு மழை பொழிவு தொடங்கியது. நகரின் பல்வேறு விடிய விடிய தொடர்ந்தது பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்துள்ளது. மழை காரணமாக சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் பகுதியில் கனமழை பதிவானது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.
இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும் நிலையில் மழை பதிவான காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நாள் முழுவதும் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், டெல்லி ஹரி நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியகினர். இன்று காலை 9.16 மணியளவில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. பலியானவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.