பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; மத்திய அரசு அதிரடி

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது.;

Update:2025-04-24 12:40 IST

ஸ்ரீநகர், 

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2½ மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்