காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்; காரணம் அது ஒரு குடும்ப அமைப்பு: பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அகமது, ராகுலுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.;

Update:2026-01-25 23:44 IST

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஷகீர் அகமது, காங்கிரஸ் ஒரு குடும்ப அமைப்பு என குற்றச்சாட்டாக கூறினார். இதனை ஆதரிக்கும் வகையில் பேசிய கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்.

ஏனெனில் அது ஒரு குடும்ப அமைப்பு. ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு குடும்பத்திற்கு உதவுவது என அதிலேயே அக்கட்சி கவனம் செலுத்துகிறது. ராகுல் காந்தியின் பயணங்களுக்கு உதவுகிறது என கூறினார்.

ராகுல் காந்தி பயணங்களுக்கு டி.கே. சிவக்குமார் செலவிடுவார். அதனால், ராகுலுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் கூறினார். சமீபத்தில் கட்சியில் இருந்து வெளியேறிய அகமது, ராகுலுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.

மூத்த தலைவர்களை ராகுல் ஓரங்கட்டுகிறார் என்றும் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் குழிதோண்டி புதைகப்படுகிறது என்றும் கூறினார். மூத்த தலைவர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர் காங்கிரசின் தலைவர்கள் மற்றும் ராகுலை பற்றி நன்றாக பேச கூடியவர்களை அந்த இடங்களுக்கு அவர் கொண்டு வருகிறார் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்