மும்பை: அமலாக்கத்துறை அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-04-27 07:40 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 5 அடுக்குமாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகம் உள்ளது.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது தளத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்