கோவா: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
காரில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
பனாஜி,
கோவா மாநிலம் வடக்கு கோவா மாவட்டம் வெல்ஹம் பகுதியை சேர்ந்தவர் ஹரிசந்திர கோன்கர் (வயது 47). இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது .சிறுமியை தின்பண்டம் வாங்கி தருவதாக தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் காரில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த சிறுமி தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசா,ர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹரிசந்திர கோன்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.