திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2025-11-13 23:11 IST

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜய் நகர் பகுதியை சேர்ந்த திருநங்கை கடந்த சில மாதங்களுக்குமுன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் திவாஸ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞருடன் திருநங்கைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். மேலும், அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்துகொள்வதாக திருநங்கையிடம் இளைஞர் கூறியுள்ளார். மேலும், திருமண ஆசை காட்டி திருநங்கைக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதேவேளை, பெண்ணாக மாறுவதற்காக டெல்லிக்கு சென்று திருநங்கை சிகிச்சை எடுத்துள்ளார். மேலும், தனது காதலனான அந்த இளைஞருக்கு கார் உள்பட 30 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக கூறிவந்த இளைஞர் திடீரென வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியுள்ளார். திருநங்கையான காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திருநங்கை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்