தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 அரிய வகை விலங்குகள் மீட்பு
அரிய வகை விலங்குகளை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
மும்பை,
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து நேற்று இரவு மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவரின் சூட்கேசில் அரிய வகை விலங்குகள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, கடத்தி வரப்பட்ட கீரி உள்பட 67 அரிய வகை விலங்குகளை மீட்ட அதிகாரிகள், பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மீட்கப்பட்ட அரிய வகை விலங்குகளை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.