மனைவி, 3 பிள்ளைகளை கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-16 05:33 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஸ்ராவஸ்தி மாவட்டம் தரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரபீக். இவருக்கு திருமணமாகி ஷனாஸ் என்ற மனைவியும், மொயின் , தபஷம், குல்னீஷ் என 3 பிள்ளைகளும் இருந்தனர். மும்பையில் வசித்து வந்த ரபீக் குடும்பத்துடன் கடந்த வாரம் தரா கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ரபீக்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக சனிக்கிழமை இரவு கணவன் , மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரபீக் தனது மனைவி ஷனாஸ் மற்றும் 3 பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு ரபீக்கும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்