மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்றிய டீக்கடைக்காரர்
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜ்மீரீல் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்ய வந்த நபர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். மத வழிபாட்டு தலம் அருகே நின்றுகொண்டிருந்த நபர், வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடைக்காரர் தக்க சமயத்தில் அந்த நபரை வெள்ளத்தில் இருந்து மீட்டார். டீக்கடை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டபோது அவரின் கையை பிடித்து டீக்கடைக்காரர் மீட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தறோது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, ராஜஸ்தானில் மழை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.