இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-04 21:36 IST

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஷாபூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ராகுல் அஹிர்வார் (வயது 20). இவர் ஷடர்பூர் பகுதியை சேர்ந்த பெண் யூடியூபரை காதலித்துள்ளார்.

இதனிடையே, காதலர்களுக்கு இடையே மனக்கசப்பு எழுந்துள்ளது. இதனால், ராகுலுடனான காதலை அந்த பெண் முறித்துள்ளார்.

இந்நிலையில், காதல் தோல்வியால் மனமுடைந்த ராகுல் இன்று இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்குமுன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ராகுல், இது எனது கடைசி வீடியோ, எனக்கு வாழ விருப்பமில்லை. நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். வாழ்க்கையில் யாரையும் காதலிக்காதீர்கள்' என்றார். பின்னர், இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் ராகுல் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார், ராகுலின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால், தூக்கில் தொங்கிய ராகுல் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்