இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' என்ற உணர்வு அவசியம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘தேசம் முதலில்’ என்ற உணர்வு அவசியமானது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.;

Update:2024-11-22 19:18 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற 'லோக்மந்தன்-2024' தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்தியாவை பொருளாதார ரீதியாக சுரண்டியது மட்டுமின்றி, அதன் சமூக கட்டமைப்பை சிதைக்கவும் முயன்றனர். அவர்கள் நமது வளமான அறிவுசார் மரபுகளை புறக்கணித்து, மக்களிடையே கலாச்சார தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினர். நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர்.

இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது. நாம் நமது விலைமதிப்பற்ற மரபுகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே 'தேசம் முதலில்' என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்