8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

டிஜிட்டல் சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;

Update:2025-06-01 09:04 IST

டெல்லி,

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியாவில் யூடியூபர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டில் 8 மாநிலங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் 15 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் நிதி ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்