யுபிஐயில் பணம் அனுப்ப பின் நம்பர் தேவையில்லை: விரைவில் வருகிறது சூப்பர் வசதி

பயனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற அரசு நிறுவனம் பல்வேறு மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது.;

Update:2025-07-31 14:06 IST

யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை இந்தியாவில் மிகவும் பிரபலமாகி உள்ளது. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாகவும் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்தலாம். வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும் யுபிஐ ஐடி மூலமாக சில வினாடிகளில் பணத்தைச் செலுத்திவிடலாம்.

சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகம் வரை யுபிஐ வசதி இருப்பதால், தற்போது மக்களிடையே யுபிஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. பயனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற அரசு நிறுவனம் பல்வேறு மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது.

அந்த வகையில், விரைவில் பின் நம்பர் பதிவு செய்யாமல் கைரேகை மூலமே பணம் அனுப்பும் வசதி கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஒருவருக்கு பணம் அனுப்பும்போது, 'பின் நம்பர்' எனப்படும் நான்கு இலக்க அல்லது ஆறு இலக்க ரகசிய எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ரகசிய எண்ணுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் கைரேகையைப் பதிவு செய்தும், முக அடையாளத்தைப் பதிவு செய்தும் பணத்தை அனுப்பும் வகையில் மேம்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சாதக பாதகங்களை ஆய்வு செய்த பிறகே இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்