இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.