பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை உலகிற்கு ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியது - பிரதமர் மோடி
பாதுகாப்புத் துறையில் நாம் தன்னிறைவு பெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
புது டெல்லி,
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது;
"பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை உலகிற்கு ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியது. பாகிஸ்தானுடனான மோதலின்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அவற்றின் தாக்கத்தைக் காட்டின. பயங்கரவாதிகளுக்கு எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.
இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளை நம்பியிருப்பது தற்போது குறைந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் நாம் தன்னிறைவு பெற்று வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் வழங்கப்படும். "
இவ்வாறு அவர் பேசினார்.