பிரதமர் மோடியுடன் ஜப்பானிய தொழிலதிபர்கள் சந்திப்பு

பிரதமர் மோடியை ஜப்பானிய தொழிலதிபர்கள் சந்தித்தனர்.;

Update:2025-03-05 20:34 IST

டெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தொழிலதிபர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.

ஜப்பானிய தொழிலதிபர் டட்சு யசுனகா தலைமையிலான தொழிலதிபர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் ஜப்பானிய தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவது, மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேல்ட் திட்டத்தை மேம்படுத்தி இந்தியாவில் தொழில் உற்பத்தை ஊக்கப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தியா, ஜப்பான் இடையேயான பொருளாதார இணைப்பை மேலும் வலிமைப்படுத்துதல் குறித்தும் பிரதமர் மோடி, ஜப்பானிய தொழிலதிபர்கள் ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்