திருப்பதி கோவில் அருகில் 'சிக்கன் பிரியாணி' சாப்பிட்ட பக்தர்கள்-போலீசார் கண்டிப்பு

திருமலையில் பிரியாணி, கோழி முட்டை போன்ற அசைவ உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது, என பக்தர்களை போலீசார் கண்டித்தனர்.;

Update:2025-01-19 05:48 IST

திருமலை,

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன்தினம் தமிழக பக்தர்கள் பலர் ஒரு வேனில் திருமலைக்கு வந்தனர். அவர்கள், அலிபிரியில் இருந்து கோழி முட்டை மற்றும் சிக்கன் பிரியாணியை திருமலைக்கு கொண்டு வந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.அதாவது திருமலை ராம்பகீசா விடுதி அருகில் உள்ள அரசு பஸ் நிலைய வளாகத்தில் அந்த பக்தர்கள் சிலர் கோழி முட்டை மற்றும் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதை நேரில் பார்த்த சில பக்தர்கள் உடனடியாக திருமலை போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் இருந்து சிக்கன் பிரியாணியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. திருமலையில் பிரியாணி, கோழி முட்டை போன்ற அசைவ உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது, என பக்தர்களை போலீசார் கண்டித்தனர்.

அலிபிரி சோதனைச் சாவடியைக் கடந்து திருமலைக்கு தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் எப்படி வந்தது? என பாதுகாப்பு பணியாளர்களிடம் இதர பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்