2027ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு

நாட்டில் கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.;

Update:2025-06-04 20:05 IST
2027ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு  - மத்திய அரசு

புதுடெல்லி,

கடந்த 2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாதி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்

இரண்டு கட்டங்களாக 2027ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பணி மார்ச் 1, 2027 முதல் நாடு முழுவதும் தொடங்கும். நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்படும். ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகாண்டில், இந்த செயல்முறை அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்