ராகுல்காந்தியின் ரேபரேலி பயணம் ரத்து

ரேபரேலி பயணம் தவிர்க்க இயலாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.;

Update:2025-07-17 09:11 IST

ரேபரேலி,

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

ராகுல்காந்தி உத்தரபிரதேச தலைநகர் லக்னோ வழியாக ரேபரேலிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், இந்த பயணம் தவிர்க்க இயலாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி தெரிவித்தார். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்