ராகுல் காந்தியின் யாத்திரை வாக்கு திருட்டுக்கானது அல்ல; அது... அமித்ஷா பரபரப்பு பேச்சு

நம்முடைய இளைஞர்களுக்கு பதிலாக, வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்கு, ராகுல் பாபா வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருக்கிறார் என அமித்ஷா பேசியுள்ளார்.;

Update:2025-09-18 14:49 IST

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரோத்தாஸ் நகருக்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு முறையும் பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர். ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். அது வாக்கு திருட்டுக்கானது அல்ல.

நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, மின்சாரம், சாலைகளுக்கானது அல்ல. அவருடைய சுற்றுப்பயணத்திற்கான விசயம் என்னவென்றால், வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் என அமித்ஷா பேசியுள்ளார்.

உங்களில் யாராவது வாக்குகளை இழந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பிய அவர், இது, ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்கான ராகுல் காந்தியின் யாத்திரை என கூறியுள்ளார். ஊடுருவல்காரர்களுக்கு வாக்களிப்பதற்கோ அல்லது இலவச ரேசன் பொருட்களை பெறுவதற்கோ உரிமை உண்டா?

அவர்களுக்கு வேலைவாய்ப்புகள், வீடுகள், ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை ஆகியவை கிடைக்க பெறுமா? நம்முடைய இளைஞர்களுக்கு பதிலாக, ராகுல் பாபாவும், அவர்களுடைய நிறுவனமும் வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருக்கின்றனர் என பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்