தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ரூ. 1.4 கோடி பணத்தை மோசடியாளர்களிடம் பறிகொடுத்தார்.;
கோப்புப்படம்
தானே,
மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்தவர் 62 வயது நபர். இவருக்கு சம்பவத்தன்று ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவரிடம் தங்கத்தில் முதலீடு செய்யக்கோரி சில ஆசை வார்த்தைகளை கூறினார். மேலும் அந்த மோசடியாளர் தங்க சுரங்கம் மற்றும் வர்த்தகத் திட்டங்களில் முதலீடு செய்வதால் சுரங்கத்தில் இருந்து நிலையான வருமானமும் தங்க வர்த்தகத்தில் இருந்து 15 சதவீத வருமானமும் கிடைக்கும் என உறுதி அளித்தார்.
இந்த திட்டத்தில் உடனடியாக முதலீடு செய்யக்கோரி ரூ.1.4 கோடி பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளில் மோசடியாளர்கள் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து மாதம் மாதம் வருமானம் பெருகும் என கூறி விட்டு அழைப்பை துண்டித்தனர். இதனையடுத்து சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் பணம் கிடைக்கும் என நம்பியவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஒரு மாதம் கடந்தும் எந்த பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் கவலையடைந்த நபர் அந்த மோசடியாளர்களுக்கு போன் செய்தார். ஆனால் மோசடியாளர்கள் இவரது அழைப்பை முற்றிலுமாக தவிர்த்து விட்டனர்.
இதனால் பணத்தை பறிகொடுத்த நபர் தானே போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியாளர்களுக்கு பணம் செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.