14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உள்பட 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.;

Update:2025-08-28 06:31 IST

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கடந்த 25 மற்றும் 26-ந்தேதிகளில் கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இதில் முக்கியமாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிஷா பானு கேரள ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். இதைப்போல மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி அதுல் ஸ்ரீதரன் சத்தீஷ்காருக்கும், சத்தீஷ்கார் நீதிபதி சஞ்சய் அகர்வால் அலகாபாத்துக்கும் மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ராஜஸ்தான் நீதிபதிகள் அவனீஷ் ஜிங்கன், தினேஷ் மேத்தா ஆகியோர் டெல்லிக்கும், அலகாபாத் நீதிபதி சஞ்சய் குமார் சிங் பாட்னாவுக்கும், டெல்லி நீதிபதி அரண் மோங்கா ராஜஸ்தானுக்கும் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல மேலும் பல்வேறு ஐகோர்ட்டு நீதிபதிகளின் இடமாற்றத்தை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்