தொழில்நுட்ப கோளாறு; சென்னை- சிங்கப்பூர் விமானம் தாமதம்- பயணிகள் அவதி

விமானத்தின் கோளாறு சீர் செய்யப்படும் வரை பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்தனர்.;

Update:2025-07-12 21:00 IST

சென்னை,

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் 217 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் விமானம் புறப்படாமல் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு விமானத்தில் தொழில் நுட்ப கோளறு சீர் செய்யப்பட்டது. விமானத்தின் கோளாறு சீர் செய்யப்படும் வரை பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்தனர். இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விமானம்காலை 11.30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்