டெல்லி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 90 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-18 19:08 IST

புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து வந்த 3 மியான்மர் நாட்டு பயணிகளின் உடைமைகளை பரிசோதித்தபோது அவர்கள் அதில் 13 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அதனை கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 2 கிலோ 158 கிராம் எடையில் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 90 லட்சம் ஆகும்.

இதுபோல தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து வந்த 2 இந்திய பயணிகளின் உடைமைகளில் 8 கிலோ 771 கிராம் உயர் ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதனையும் அதிகாரிகள் கைப்பற்றி அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.9 கோடி ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்