ஜார்க்கண்ட்: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

இந்த விபத்தில் 80 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2026-01-18 19:52 IST

ராஞ்சி,

சத்தீஷ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 90 பேர் இன்று உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பஸ்சில் ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட்டின் லெட்கர் மாவட்டம் மஹடனிர் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 4 பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்