பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: தனியார் பள்ளி நிர்வாக அதிகாரி கைது

கணவரிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து செல்ல முடிவு செய்து விவாகரத்துகோரி பெண் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.;

Update:2026-01-18 15:55 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியில் 43 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். இதையடுத்து தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும், கணவரின் துன்புறுத்தலை தாங்கி கொள்ள முடியாத அந்த பெண் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் அந்த பெண் கணவரிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து செல்ல முடிவு செய்து விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே அந்த பெண்ணின் கணவருக்கு கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கவே, தனியார் பள்ளிக்கூடத்தை முகமது ஹனிப் என்பரிடம் அவர் விற்றார். பின்னர் பள்ளியை முகமது ஹனிப் நிர்வகித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண், முகமது ஹனிப்பை சந்தித்து அந்த பள்ளியை தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு முகமது ஹனிப் பள்ளியை திரும்ப தருவதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

பின்னர் அந்த பெண் பள்ளியை மீட்டெடுக்க முன்பணமாக ரூ.16 லட்சத்தை முகமது ஹனிப்பிடம் கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணும், முகமது ஹனிப்பும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் அந்த பெண் பள்ளியை திரும்ப பெறும் வேலையாக அடிக்கடி முகமது ஹனிப்பின் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், முகமது ஹனிப், அந்த பெண்ணிடம் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். திருமணத்துக்கு பிறகு பள்ளி உன்னுடையது ஆகிவிடும் என்றும் அதற்கு நீ மதம் மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அந்த பெண் மறுத்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வேலையாக முகமது ஹனிப்பின் அலுவலகத்துக்கு அந்த பெண் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த முகமது ஹனிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முகமது ஹனிப் பெண்ணை சாதி பெயரை கூறி திட்டி அவமானப்படுத்தி உள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் பேடராயனபுரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது ஹனிப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்