வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இளம்பெண் உள்பட 3 பேர் கைது

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2026-01-18 19:54 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துரா அருகே உள்ள சாத்தாடி சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஹில் பேலஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிஜின் தாமஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலச்சந்திரன், சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தனர். அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த இளம்பெண் உள்பட 3 பேரை கைது விசாரித்தனர்.

இதில் அவர்கள் தலச்சேரி பகுதியை சேர்ந்த நிவேத் ஷைனித் (வயது 22), தேவா சதீஷ் (22), ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழா பகுதியை சேர்ந்த தேவிகா (23) ஆகியோர் என்பதும், அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்