பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பீகார் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.;

Update:2025-10-09 18:27 IST

பாட்னா,

பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக உள்ளார். தற்போது பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பீகார் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாகுறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டத்தை இயற்றுவேன். புதிய அரசு ஆட்சியமைத்த 20 நாள்களுக்குள் இந்த சட்டம் இயற்றப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியால் 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 20 நாள்களுக்குள் சட்டத்தைக் கொண்டு வருவோம். மேலும் 20 மாதங்களில் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்