2025-05-06 04:55 GMT
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நியமித்த விசாரணைக்குழு அறிக்கை வழங்கியது
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14-ந்தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் 3 ஐகோர்ட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார். இந்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எடுக்கப்பட்ட பணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் விசாரணைக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
2025-05-06 04:43 GMT
- மத்திய உள்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம்
- மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் தலைமையில் அவசர கூட்டம்
- அவசர கூட்டத்தில், நாட்டின் 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு உறுதி செய்யவுள்ளதாக தகவல்
2025-05-06 04:16 GMT
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
- திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
- ஹரிஹரன்(17), வெங்கட்ரமணன்(19), வீரராகவன்(24) ஆகிய மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
- கோவில் குளத்தில் மூழ்கி தரிசனம் செய்ய முயன்ற நபர் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்ற முயன்ற 2 பேர் உட்பட 3பேர் உயிரிழப்பு
2025-05-06 03:51 GMT