இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

Update:2025-04-17 09:06 IST
Live Updates - Page 2
2025-04-17 09:39 GMT

தமிழகத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் எத்தனை என்கவுன்டர்கள் நடந்துள்ளன? என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

2025-04-17 08:57 GMT

குஜராத்தில் சமி கிராமத்தில் இன்று காலை அரசு பஸ் மீது ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் சிக்கி ஆட்டோவில் பயணித்த 6 பேர் பலியானார்கள்.

2025-04-17 07:26 GMT

விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் இன்று காலையில் சமைப்பதற்காக சமையல் ஊழியர் கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் வெளியாகி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கியாசை பற்ற வைத்ததும் கியாஸ் வெடித்து சிதறியது. இதில் சமையலறையில் இருந்த சமையலர், சமையலர் உதவியாளர் மற்றும் சமையலர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

2025-04-17 07:23 GMT

தட்கல் டிக்கெட்டுக்கு எதிரான வழக்கு - விசாரிக்க மறுப்பு

தட்கல் ரயில் டிக்கெட் பதிவு முறைக்கு எதிராகதாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைவிசாரணைக்கு ஏற்க மறுப்பு

"பொதுவாக பொருளாதாரம் சார்ந்த அரசின்கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது" - உச்சநீதிமன்றம் 

2025-04-17 07:05 GMT

"மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?"

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்ட விவகாரம்"மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத திமுக அரசு" - அதிமுக கண்டனம்

2025-04-17 06:26 GMT

கோவை: மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினர் பென்னட் ஹாரிஸ் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பென்னட் ஹாரிஸை போலீஸ் கைது செய்தது. போக்சோ வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் ஏற்கெனவே கைதான நிலையில் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025-04-17 06:12 GMT

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த நினைக்க வேண்டாம். திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என்று கூறினார்.

2025-04-17 06:08 GMT

2026 தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தனித்துதான் ஆட்சியமைக்கும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று தம்பிதுரை எம்.பி கூறியுள்ளார். 

2025-04-17 06:05 GMT

சென்னையில் கணவரை திருத்த எலி மருந்து குடித்த மணிமேகலை என்ற பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்