மாநில சுயாட்சி ஏன் அவசியம்? - முதல்வர் விளக்கம்
மாநில சுயாட்சி குழு ஏன் தேவை? காரணங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தினத்தந்தி நாளிதழில் எழுதிய கட்டுரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
"மத்திய பா.ஜ.க அரசு மாநில அரசுகளை அழிக்க பார்க்கிறது
மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை அழித்து, உரிமைகளை சிதைக்க பார்க்கிறது
வளர்ச்சியான மாநிலங்களே வலிமையான இந்தியாவை உருவாக்கும்
தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்குவதில்லை
எந்த பிரிவினை எண்ணத்தோடும் மாநில சுயாட்சி குழுவை அமைக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாதது ஏன்?-நஸ்ரியா விளக்கம்
நடிகை நஸ்ரியா நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், சமூகவலை தளங்களில் புகைப்படங்கள் கூட பதிவிடாமல் இருந்தது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்
மன ஆரோக்கியத்துடனும், தனிப்பட்ட சவால்களுடனும் தான் போராடி வருவதால் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அழைப்புகளை ஏற்காமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்
மேலும் கேரளா திரைப்படம் க்ரிடிக்ஸ் (critics) விருதுகளில்
தனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.