காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை பூஞ்ச் மாவட்டத்தின் மல்டிவலன் பகுதியில் உள்ள டக்வார் செக்டாரில் பாதுகாப்புப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
என்கவுன்டர் நடைபெற்ற பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.