உ.பி. முதல்-மந்திரி குறித்து இன்ஸ்டாவில் சர்ச்சை புகைப்படம்; இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.;
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். பாஜக மூத்த தலைவரான இவரின் புகைப்படத்தை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து மர்ம நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்ட அம்மாநிலத்தின் பாக்பத் மாவட்டம் ஹெர்கா கிராமத்தை சேர்ந்த ஜுனைத் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜுனைத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.