விமான விபத்தில் மத்திய அரசுக்கு உதவ அமெரிக்க அதிகாரிகள் இந்தியா விரைவு
விமான விபத்து மீட்புப் பணிகள் நள்ளிரவு வரை நீடித்தது.;
புதுடெல்லி,
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த கோர விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
விபத்து மீட்புப் பணிகள் நேற்று (ஜூன் 12) நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில் விமான விபத்தில் மத்திய அரசுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இந்தியா விரைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எப்.ஏ.ஏ., வழங்குவதாக தெரிவித்து உள்ளது.