அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்;

Update:2025-02-16 01:51 IST

அமிர்தசரஸ்,

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 116 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 116 இந்தியர்களுடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட நள்ளிரவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதில் 65 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கோவா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சல் மாநிலத்தை சேர்ந்த தலா ஒருவர் தாயகம் வந்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்