உத்தர பிரதேசம்: பதிவு திருமணம் செய்ய காத்திருந்த வாலிபர் கோர்ட்டு வாசலில் கழுத்தறுத்துக் கொலை

முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-10-02 13:45 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்த வாலிபர் நாயிப். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  நாயிப், தனது உறவுக்கார பெண்ணை பதிவு திருமணம் செய்வதற்காக மாவட்ட கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கோர்ட்டுக்கு வெளியே உள்ள ஸ்டூடியோவில் போட்டோ எடுப்பதற்காக அவர்கள் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியால் நாயிப்பை சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த நாயிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்