ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; போர்ட்டர் கைது
ரெயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போர்ட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில் உள்ள ரெயிலின் காலியான பெட்டியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போர்ட்டர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு ஒரு பெண்ணும் அவரது மகனும் பாந்த்ரா ரெயில் நிலையத்திற்கு ஒரு ரெயிலில் வந்தனர். இறங்கிய பிறகு, நடைமேடையின் மறுபுறம் நின்ற மற்றொரு ரெயிலில் நுழைந்துள்ளனர். அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. ஆனால் அந்த ரெயிலில் இருந்த ஒரு போர்ட்டர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரெயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த போர்ட்டரை போலீசார் கைது செய்தனர் என்றார்.