2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம்.. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்றநிலையில், போலீசார் சமாதானப்படுத்தியும் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.;
கள்ளக்காதலன் சந்தோசுடன் லீலாவதி.
பன்னரகட்டா,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி லீலாவதி. இந்த தம்பதிக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 மகன்கள், மகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக லீலாவதிக்கும், கார் டிரைவரான சந்தோஷ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மஞ்சுநாத்திற்கு சமீபத்தில் தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவி லீலாவதியை கண்டித்தார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆனாலும் சந்தோசுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட லீலாவதி மறுத்து விட்டார்.
இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி சந்தோசுடன் லீலாவதி வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி பன்னரகட்டா போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாத் புகார் அளித்தார். சந்தோசிடம் இருந்து தனது மனைவியை மீட்டு கொடுக்கும்படி போலீசாரிடம் மஞ்சுநாத் கூறினார். இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், லீலாவதியை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள்.
பின்னர் லீலாவதியிடம் போலீசார் சமாதானமாக பேசினார்கள். 3 குழந்தைகள் இருப்பதால் கணவருடன் சேர்ந்து வாழும்படி லீலாவதிக்கு போலீசார் அறிவுரையும் கூறினார்கள். ஆனால் அதற்கு மறுத்த லீலாவதி தனக்கு 3 குழந்தைகளும் வேண்டாம், கணவர் மஞ்சுநாத்துடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, கள்ளக்காதலன் சந்தோசுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று உறுதியாக கூறி விட்டார்.
மேலும் மஞ்சுநாத் கட்டிய தாலியையும் லீலாவதி கழற்றி கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து சென்றுவிட்டார். இதனால் தாய் வேண்டும் என்று கூறி 3 குழந்தைகளும் கண்ணீர் விட்டு அழுதார்கள். பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து தனது 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மஞ்சுநாத் வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே மஞ்சுநாத், லீலாவதியின் புடவையை கையில் வைத்துக் கொண்டு லீலாவதியை திரும்பி வந்துவிடும்படி கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.