மதம் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக காதல் மனைவி மீது வாலிபர் போலீசில் புகார்

விஷாலை இந்து மதத்துக்கு செல்லக்கூடாது என்றும், முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும் கட்டுப்பாடுகள் விதித்தார்.;

Update:2025-07-17 15:21 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் பெட்டகேரி கிராமத்தை சேர்ந்தவர் விஷால் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் தவ்ஹின் (23). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் தவ்ஹின் பெற்றோருக்கு தெரிந்ததும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த எதிர்ப்பையும் மீறி தவ்ஹின், விஷால் ஆகியோர் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த தவ்ஹின் பெற்றோர் 2 பேரையும் ஏற்றுக்கொள்வதாக கூறினர். மேலும் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்ததால், தவ்ஹின், விஷாலை இந்து மதத்துக்கு செல்லக்கூடாது என்றும், முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும் கட்டுப்பாடுகள் விதித்தார்.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் விஷால் தற்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தவ்ஹின் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மதம் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளார். அதை ஏற்ற போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்