இளம்பெண்ணிடம் காதலை தெரிவித்த வாலிபர் குத்திக்கொலை

வாலிபர் கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-12-15 05:50 IST

திருச்சூர்,

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பரப்புக்கரா பகுதியை சேர்ந்தவர் அகில் (வயது 28). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால், அதை இளம்பெண் ஏற்கவில்லை என தெரிகிறது. இருப்பினும், அகில் தனது காதலை இளம்பெண்ணிடம் தெரிவித்து வந்தார். இதுகுறித்து இளம்பெண் தனது சகோதரரும், ரவுடியுமான ரோகித் (32) என்பவரிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர் அகிலை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்களான விபின் என்கிற போப்பி (34), கிரிஷ், (36) ஆகிய 2 பேருடன் ரோகித் அகில் வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்து அவரை வெளியே வரவழைத்து, தகராறில் ஈடுபட்டனர்.

3 பேர் கைது

தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ரோகித் தனது நண்பர்களுடன் சேர்ந்து அகிலை கத்தியால் சரமாரியாக குத்தினார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்த போது, 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். பின்னர் அவர்கள் அகிலை மீட்டு திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி இறந்தார். தகவல் அறிந்த மன்னூத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் இளம்பெண்ணிடம் காதலை தெரிவித்த அகிலை இளம்பெண்ணின் சகோதரர் ரோகித் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரோகித், விபின், கிரிஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருச்சூரில் இருந்து தப்பி செல்வதற்காக ரெயில் நிலையத்தில் அவர்கள் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்