இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
மண்டி பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
இமாச்சல பிரதேசத்தின் மண்டி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.24 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.