கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோவில்பட்டி, கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;

Update:2025-08-08 07:04 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று (7.8.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு கார்களில் இருந்தவர்களை சோதனை செய்தனர். அதில் அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த ராமையா மகன் சங்கிலிபாண்டி (வயது 39), தூத்துக்குடி P&T காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜா(31), கோவில்பட்டி கணேஷ்நகரை சேர்ந்த நடராஜ் மகன் நாகராஜ்(23) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்சொன்ன போலீசார் சங்கிலிபாண்டி, மகாராஜா, நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்