பள்ளி வேனில் வைத்து 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - டிரைவர் கைது

வேன் டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2025-06-11 20:27 IST

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்தவர் மதுமோகன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவர் பள்ளி வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல, பள்ளியில் விடுவதற்காக மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.அப்போது  வேனில் இருந்த 11ம் வகுப்பு மாணவியை தவிர மற்ற அனைவரையும் இறக்கிவிட்ட மதுமோகன், அந்த 11ம் வகுப்பு மாணவியிடம்,ஒரு அசைமெண்ட் உள்ளதாக வேனில் சிறிது தூரம் அழைத்துச்சென்றுள்ளார்.

பின்னர் பள்ளி வேனிலேயே வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், காலை 10 மணிக்கு அந்த மாணவியை பள்ளியில் இறக்கிவிட்டுள்ளார். இது தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுமோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்