சேலத்தில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்த வங்காளதேசத்தை சேர்ந்த 12 பேர் கைது

சட்டவிரோதமாக சேலத்திற்கு வந்து குடியுரிமை பெறாமல் தங்கியது தெரியவந்தது.;

Update:2025-11-10 23:49 IST

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி அடுத்த கோம்பைகாடு பகுதியில் உள்ள ஸ்வெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் தனிப்படை போலீசார் நேற்று மதியம் திடீரென சோதனை செய்தனர். அப்போது அங்கு வங்காளதேசத்தை சேர்ந்த 12 பேர் வேலை செய்து வந்தது தெரிந்தது. அவர்கள் சட்டவிரோதமாக அந்த நாட்டில் இருந்து சேலத்திற்கு வந்து குடியுரிமை பெறாமல் தங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஒரு பெண் உள்பட 12 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 பேரையும் போலீசார் தனி வேனில் அழைத்து சென்று ஆத்தூரில் உள்ள வங்காளதேச அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்