17 வயது கல்லூரி மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் - மாணவர் மீது வழக்கு

விடுதியில் அறை எடுத்து தங்கிய கல்லூரி மாணவர், மாணவியை மது குடிக்க வைத்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.;

Update:2025-10-17 19:50 IST

கோப்புப்படம் 

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் மணி (20 வயது). இவர் வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந்தேதி இவருக்கு பிறந்த நாள் ஆகும். இதனால் தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள் விருந்து வைப்பதாக கூறி கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கிய மணி, கல்லூரி மாணவியை மது குடிக்க வைத்ததுடன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செம்பியம் அனைத்து மகளிர் போலீசார், மணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்